Facebook
Google+
Twitter
LinkedIn

பற்றிக் பிரவுண்

கனேடியத் தமிழ்ச் சமுதாயத்தின் உண்மை நண்பன்.

ஸ்ரீலங்காஅரசிற்கு எதிரான, கனேடிய அரசின் இன்றைய நிலைப்பாட்டிற்கு முன்னின்று உழைத்தவர். தமிழ்ச் சமுதாயத்திற்கு எதிராக இனவாத, அடக்குமுறை ஸ்ரீலங்கா அரசினால்தொடர்ந்து இழைக்கப்படும் கொடுமைகளைக்கண்டு எம்மக்களின் மேல் அனுதாபம் கொண்டு 2009 ம் ஆண்டு தொடக்கம் கனேடியத் தமிழ்ச் சமூகத்துடன் இணைந்து பணியாற்றி வருபவர். ஸ்ரீலங்கா அடக்குமுறை ஆட்சியாளர்களுக்கு எதிராக ஒட்டவாவில் இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாடங்களில் கலந்துகொண்ட ஒரே ஒரு நடுத்தரவாத கட்சியின் உறுப்பினர். பற்றிக் அவர்கள் 2009ம் ஆண்டு மே மாதம் சிறிலங்காவிற்கு விஜயம் செய்து, இனவாத ஸ்ரீலங்கா அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் அடக்குமுறையையும், அர்த்தமற்ற இறப்புகளையும், சர்வதேசத்தின் கண்முன்னால் நிறுத்தியவர்.

பற்றிக் பிரவுண் முன்னின்று உழைத்து, வெற்றி பெற்ற தமிழ் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகள் பலவற்றில் சில,

பிரித்தானிய சனல் 4இன் "Killing Field" என்ற ஆவணப் படத்தை கனேடியப் பாராளமன்ற வளாகத்தில் திரையிட்டு, தமிழ் மக்கள் எமது தாயகத்தில் எதிநோக்கும் பிரச்சனைகளை கனடியப் பாராளமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்தியம்பியவர். கடந்த ஐந்து வருடங்களாக, எம் தாயகத் தமிழ் மக்களின் தொடர்ச்சியான, நிலையற்ற வாழ்வியலை எண்ணற்ற கருத்தரங்குகளையும், கூட்டங்களையும் நடாத்தி கனேடிய மக்களுக்கும், கனடியப் பாராளமன்ற உறுப்பினர்களுக்கும் முன்னின்று கற்பித்தவர். கனேடியப் பாராளமன்றத்திலே அறிக்கை சமர்ப்பிக்க கிடைக்கும் நேரத்திலோ அல்லது கேள்வி கேட்க கிடைக்கும் நேரத்திலோ, தனக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்கள்பலவற்றில். தமிழ் மக்கள் எதிநோக்கும் பிரச்சனைகள் பலவற்றை பாராளமன்றத்திலே சமர்பிப்பதற்கு எப்போதுமே முன்நிற்பவர். ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடர்களில் பங்கேற்று ஸ்ரீலங்கா அரசிற்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடாத்தப்படவேண்டும் என வாதிட்டவர். இலங்கைத் தமிழ் மக்களால் எதிர்நோக்கப்படும் மனித உரிமை மீறல்கள் பற்றி கனேடியப் பிரதமருக்கு அறியத்தந்தவர். ஐக்கிய நாடுகள் சபையில், ஸ்ரீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான கனேடிய அரசாங்கத்தின் கடுமையான நிலைப்பாட்டிற்கு காரணமானவர். கனடா, பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்ற முடிவையெடுக்க முன்னின்று உழைத்தவர். ஒன்டாரியோ மாநிலத்தின் நடுத்தரவாத கட்சியின் அடுத்த தலைவராக வரப் போட்டியிடும் பற்றிக் பிரவுண் அவர்களுக்கு எமது தமிழ்ச் சமூகம் முழு ஆதரவையும் வழங்குவோம். எமது தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட, எம் தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக தாயகத்தில் இழைக்கப்படுகின்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுக்கின்ற மனித உரிமைவாதி, தமிழ் மக்களின் நண்பன் பற்றிக் பிரவுண் அவர்களை ஒன்டாரியோ மாநிலத்தின் அடுத்த முதல்வராக்குவோம்.

Patrick Brown: True Friend of the Tamils

The man behind Canada’s stand against the Sri Lankan government at the UN and Canada’s boycott of the Commonwealth Summit

  • Patrick started working with the Tamils from the 2009 protest for humanitarian reasons rather than politics – he has 5 Tamils living in his riding
  • One of the only conservative MPs to attend the protest in Ottawa when MPs from the other “Tamil Friendly” parties went into hiding
  • Took the risk to fly to Sri Lanka in May 2009 to bring international attention to the killings
  • Arranged the screening of the Channel 4 video “The Killing Fields” on parliament hill to inform other MPs
  • Worked tirelessly for over 4 years to arrange meetings and discussions on the plight of the Tamils
  • Took up Tamil issues several times in Parliament
  • Attended the UN and advocated for a war crime investigation at the UN
  • Instrumental in bringing the human right abuses to the attention of the Prime Minister
  • Played a key role in convincing Canada to take a strong position at the UN as well as in boycotting the Commonwealth Summit

Rajapakse needs to be Brought to Justice

Rajapakse needs to be Brought to Justice இராஜபக்ச இழைத்த போர்க்குற்றங்ககளுக்காக நீதிமன்றில் நிறுத்தப்படவேண்டும்

Read More »

Patrick Brown on Human rights violations in Sri Lanka

Patrick Brown on Human rights violations in Sri Lanka ஸ்ரீலங்காவில் தொடர்ந்தும் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பற்றிக் பிரவுண் அவர்கள்

Read More »

PC M.P. Mr. Patrick Brown speaks at the CHRV: 2012 Ottawa Conference

PC M.P. Mr. Patrick Brown speaks at the CHRV: 2012 Ottawa Conference பாரளமன்ற உறுப்பினர் பற்றிக் பிரவுண் அவர்கள் 2012ம் ஆண்டு CHRV அமைப்பினால் ஒட்டவாவில் நடாத்தப்பட்ட கருத்தரங்கில் உரையாற்றியபோது

Read More »

Patrick Brown in banning Sri Lanka military travel to Canada

Patrick Brown in banning Sri Lanka military travel to Canada பற்றிக் பிரவுண் அவர்கள் ஸ்ரீலங்கா படையதிகாரிகள் கனடாவிற்குள் நுழைவதைத் தடைசெய்யுமாறு வலியுறுத்தியபோது

Read More »

Two Canadian MPs claim they were denied Lankan visas

Two Canadian MPs claim they were denied Lankan visas இரண்டு கனேடியப் பாரளமன்ற உறுப்பினர்களுக்கு ஸ்ரீலங்கா செல்வதற்கான பிரயாண அனுமதி (வீசா) மறுக்கப்பட்டபோது

Read More »